ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மாற்றத்திற்கு தயாராவோம்

ஒரு விளையாட்டு மைதானம்...

சிறுவர்கள் ஓட தயாராக வரிசையில் நிற்கிறார்கள்...

"ரெடி..."

"ஸ்டார்ட்..."

"கோ..."

துப்பாக்கி சத்தம் கேட்டதும் சிறுவர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள்...

கொஞ்ச தூரம் ஓடியிருக்க, திடீரென ஒரு சிறுவன் கிழே விழுந்து விடுகிறான்...

வலியில் துடித்த சிறுவன் அழ, மற்ற சிறுவர்கள் சட்டென்று தங்களது ஓட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள்...

விழுந்த சிறுவனை நோக்கி வந்து...
அத்தனை சிறுவர்களும் ஒன்று சேர்ந்து, அவனை தூக்கி...
மெதுவாக நடத்தி கொண்டு வந்து...
வெற்றி கம்பத்தை தொட செய்கிறார்கள்...

தேர்வாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள்...

பார்வையாளர்கள் கண்களில் கண்ணீர்...

இது புனேயில் நடந்த உண்மை சம்பவம்...

பந்தயம் நடத்தியது, "தேசிய மனநல பயிற்சி நிறுவனம்"

அனைத்து சிறுவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்...

அந்த சிறுவர்கள், நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்...
"ஒற்றுமை"
"ஒத்துழைப்பு"
"மனித நேயம்"
"அக்கறை"
"ஆபத்தில் உதவுதல்"
"நேர்மறை சிந்தனை"
"சமத்துவம்"
"விட்டு கொடுத்தல்"
மற்றும்
"மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, மனநிறைவு அடைதல்"

நல்ல மனநலத்தோடு இருப்பதாக நினைத்து கொள்ளும் நம்மால் இவ்வாறு நடந்திருக்க முடியுமா?

சந்தேகம் தான்...

ஏனென்றால்,
நமக்கு தான் "தான்" என்கிற அகந்தை இருக்கிறது...

ஆத்ம ரீதியான வெற்றியை உணராமல், உணர்த்தாமல்...
உலகியல் வெற்றி மட்டுமே அடைய போதிக்க பட்டிருக்கிறோம்...

மற்றவர்களை ஜெயிக்க வைத்து, ஜெயிக்காமல்...
தோற்க வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற குறுகிய சிந்தனையில் சிந்திக்க பழக்க படுத்தபட்டிருக்கிறோம்...

அதாவது, மற்றவர்களை ஆனந்தபடுத்துவதே பேரானந்தம் என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை...

எனவே,
இன்றே, இப்போதே...

மனதை நடுநிலையில் வைத்து, சுயபரிசோதனை செய்வோம்...

நம் தவறுகளை காண்போம்...

மாற்றத்திற்கு தயாராவோம்...

நல்ல மாற்றத்தை நம்மில் கொண்டு வருவோம்...

நாம் நன்றாக நலமாக, வாழ்ந்தால் தான், நம் நாடு வளமாக மாறும்...

வாழ்க நலமுடன், வளமுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக