செவ்வாய், 6 நவம்பர், 2018

நமது பார்வையை மாற்றுவோம்.

    நரகாசூரன் கதை எல்லாம் மக்கள் மறந்து பல காலம் ஆனது. மக்களை பொருத்தவரை தீபாவளினா லீவு, பட்டாசு,  புத்தாடை, இனிப்பு, தொலைக்காட்சி... அவ்வளவே..

முற்போக்கு பேசுவோர் தான் பண்ணி அவதாரம், பூமாதேவி, நரகாசூரன்னு பாராயணம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம்.

நாம் கூர்மைப்படுத்த வேண்டியது அரசுக்கும் மக்களுக்குமான முரண்பாட்டைதான்.

ஆனால் கூர்மைப்படுத்திக்கொண்டு இருப்பது நமக்கும் மக்களுக்குமான முரண்களையே.

முதன்மை இல்லாத  முரண்பாடுகளை எல்லாம்  இன்றைக்கே  தீர்க்க நினைப்பது அரசியல் அறிவியலுக்கு முரணானது.

அடிப்படை, முதன்மை முரண்களை தவிற பிறவற்றை தவிர்க்க கற்பதே அரசியலின் அடிப்படை.

மக்களை எல்லாம் பிற்போக்காலர்களாகவும்  நம்மை அறிவாளியாக காட்டிக்கொள்ளவும் எல்லா இடங்களிலும் மக்களிடம் அறிவு சமர் செய்வதும் சரியன்று.

ஆனால் அதை கடந்து,
நமது சண்டை மக்களிடம் அல்ல அரசிடம் ,  அந்த சண்டையை மக்களுடன் சேர்ந்தே நடத்த முடியும்,
அதை செய்து முடிக்க மக்களுடன் முதன்மையில்லா விஷயங்களுக்கு மல்லுக்கட்டுவதை விடுத்து மக்களுடன் சேர்ந்து முதன்மை விஷயங்களுக்கு பணி செய்வதொன்றே நமது பணி,
அந்த பணிகளினூடே நமக்கும் மக்களுக்குமான முரண்பாடுகள் தீரும் என அடுத்தடுத்த புரிதல்கள் பெற்று நமது செயல்களை  மாற்றிக்கொள்வதே வளர்ச்சி.    

மக்களை அணிதிரட்டும் நோக்கம் முதன்மையாக இருந்தால் மக்களுக்கும் நமக்குமான முரண்பாடுகளை கூர்மைப் படுத்தாமல் அரசுக்கும் மக்களுக்குமான முரண்பாட்டில் தான் நமது கவனம் இருக்கும். 

தீபாவளியை எதிர்த்து விட்டு ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முற்போக்குத் தனத்தை(?) விட தீபாவளிக் கொண்டாடிவிட்டு நீட், எட்டுவழிசாலை.. என இந்தியத் திட்டங்களை எதிர்க்கும் பொது மக்கள் எவ்வளவோ மேல்...

நமது பார்வையை மாற்றுவோம். மாற்றாமல் மக்களை அணி திரட்ட முடியாது என்பதே மார்சியமும், மக்களும் நமக்கு கற்று தருவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக