Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

புதன், 27 மே, 2020

Jeevan Lakshya

  • Jeevan Lakshya is the ideal plan to protect your goals & needs as this plan offers the regular income to the family in case of an unfortunate event
  • In case of any unfortunate event premium ceases & Annual Income Benefit is paid to the family every year till maturity which is 10% of Sum Assured. On Maturity, 110% of Sum Assured is paid along with vested Bonus & final bonus, if any
  • The benefits under this plan are tax-free
  • This plan has an option of choosing the Accidental Life cover, Disability Benefit & Critical illness cover
  • This plan also has the option of taking the Maturity proceeds in instalments as the policy-holder can choose the no of year as 5, 10 or 15.
  • In a similar way, the policyholder also has the option of choosing the death benefit in instalments
  • LIC also offer the discount in the premium in case the mode of payment is Yearly
  • The loan is also available to the policyholder after the completion of 1 year of the policy
For more information about 
Jeevan Lakshya
Contact
K DHAMODHARAN M.Com.,LLB.,HDCM
Financial Planner
+91 7358210672

செவ்வாய், 26 மே, 2020

கல்வி கடனுக்கான மத்திய அரசின் புதிய அறிவுருத்தல்

 கல்வி கடனுக்கான மத்திய அரசின்  புதிய அறிவுருத்தல் 

பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இந்த
 "வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students   
 இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வண்டும்


 வித்யா லட்சுமி கார்யகிரம்’ ( Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை
 NSDL என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
 கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 34 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது NSDL அமைப்பு நிர்வகிக்கும் 

இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பிக்க வேண்டும்.* 
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘ வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அனைவருக்கும் இலவசமாக கல்வியை அரசே வழங்குவதும்
அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை அரசே நடத்தினால் கடன் வாங்க  தேவை இல்லை.


 வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
https://www.vidyalakshmi.co.in/Students
"வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
https://www.vidyalakshmi.co.in/Students   

பணத்தை பாதுகாக்க 5 வழிகள்

பணத்தை ஈட்டுவதை விடவும் பாதுகாப்பது கடினம்.  பணத்தை பாதுகாக்க 5 வழிகள்.உங்கள் பொருளாதார வாழ்விற்க்கு சிறப்பான வடிவம் கிடைக்க ஐந்து வழிகள். *செலவுகளை பதிவு செய்யுங்கள்* இது மிகவும் எளிமையான ஆனால் வலிமையான செயல்முறை. உங்கள் செலவுகள் உங்கள் கட்டுபாட்டுக்கு கீழ் வந்தாலே , உங்கள் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். உங்கள் செலவுகளை எழுத துவங்கும் பொழுதே... நாம் செய்யும் செலவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படும் . நீங்கள் பதிவு செய்த செலவு கணக்குகளை சில மாதங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள். தேவையேயில்லாமல் நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் சில பொருட்களை உங்களால் கண்டறியமுடியும். ஆசைக்காக சில பொருட்களை வாங்கலாம். ஆனால் அனைத்து பொருட்களையும் ஆசையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய பணநெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணரமுடியும். செலவுகளை பதிவு செய்யும் இந்த பழக்கத்தால் ஆசைக்கு செலவு செய்வதை விட தேவைகளுக்கு செலவு செய்வது குறித்த தெளிவு நமக்கு கிடைப்பது உறுதி. *ஆராய்ந்து பாருங்கள்* கார், பெரிய எலக்ட்ரானிக் சாதனங்கள், நகைகள், போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களை வாங்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் பல இடங்களில் ஆராய்வது அவசியம். தற்சமயம் இணையத்தில் பொருட்கள் குறித்த விமர்சனங்கள், குறிப்பிட்ட பொருட்கள் எங்கே விலை குறைவாக தரமாக கிடைக்கும் போன்ற தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அவைகளை ஓர் பார்வை பார்த்த பின் பொருட்களை வாங்குவது குறித்த முடிவினை எடுக்கலாம். *பொறுமையாக இருங்கள்*பெரும்பாலும் சற்று பொறுமையாக இருந்தாலே சில ஆயிரங்களை சேமித்து விடலாம். இன்று இந்த சமயம் உடனடி தேவையாக தெரியும் சில பொருட்கள் ஒரு சில மாதங்களில் உங்களுக்கு தேவையற்றதாக மாறலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குகிற பொழுது உடனடி முடிவுகளை எடுக்காமல் சற்று நேரம் ஒதுக்கி சிந்தித்து பாருங்கள்.... இரண்டு நாட்களின் உங்கள் முடிவுகளின் தீவிரமும்... வாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஆர்வமும் அடர்த்தியும் குறையும். உதாராணமாக சில எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க விளைகிறீர்கள் அந்த முடிவை சற்று ஒத்தி வைத்தால் விழா கால சலுகைகள் கிடைக்கும். ஆரம்பத்தில் விலை அதிகமாக விற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் சில நாட்களில் குறைய துவங்கும். எனவே காத்திருப்பதற்க்கும், முடிவுகளை குறித்து சிந்திப்பதற்க்குமான சூழல் இருந்தால் சற்று சிந்தித்து செயல்படுங்கள். *நிதர்சனத்தை உணருங்கள்* பெரும்பாலும் நாம் டீ, காபி, சிகரேட் போன்ற சிறிய சிறிய விஷயத்திற்க்கு அதிகம் செலவு செய்வோம்.... தினசரி இந்த செலவுகளை செய்கிற பொழுது அதிக விலை மதிப்புமிக்கதாக தோன்றாது. ஆனால் மாதக்கடைசியில் கணக்கிட்டால் இது கணக்கில் கொள்ள வேண்டிய பெரிய தொகையாக வளர்ந்திருக்கும். உதாராணமாக உங்களுக்கு தொடர் பழக்கம் ஏதேனும் இருந்தால் கண்கானித்து பாருங்கள். ஒருநாளைக்கு எத்தனை முறை டீ காபி அருந்துகிறீர்கள் அது எந்த விதமான செலவினை தருகிறது. குறைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் குறைத்து கொள்ளுங்கள் மாத கடைசியில் நீங்கள் குறைத்ததால் சேமித்த தொகை நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிப்பதாய் இருக்கும். *சேமிப்பும் முதலீடும்* சீறிய ஒழுக்கத்துடன் தவறாமல் சேமிப்பதும் முதலீடு செய்வதும் பொருளாதார மேலாண்மையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எத்தனை விரைவாக சேமிக்க முடியுமோ சேமிக்க துவங்குங்கள். உங்களின் வருமானம் மற்றம் தேவையான செலவுகளை கணக்கிட்டு சரியான சேமிப்பு தொகையை நிர்ணயம் செய்யுங்கள். மாதத்தின் முதல் தேதியில் நீங்கள் நிர்ணயித்த தொகையை சேமிப்பதை முதல் வேலையாக செய்யவேண்டும்.
தாமோதரன் கி
Financial Planner
+91 7358210672