கல்வி கடனுக்கான மத்திய அரசின் புதிய அறிவுருத்தல்
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இந்த
"வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வண்டும்
வித்யா லட்சுமி கார்யகிரம்’ ( Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை
NSDL என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 34 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது NSDL அமைப்பு நிர்வகிக்கும்
இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பிக்க வேண்டும்.*
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘ வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அனைவருக்கும் இலவசமாக கல்வியை அரசே வழங்குவதும்
அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை அரசே நடத்தினால் கடன் வாங்க தேவை இல்லை.
வித்யா லட்சுமி கார்யகிரம்’
https://www.vidyalakshmi.co.in/Students
"வித்யா லட்சுமி கார்யகிரம்’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக