Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு
 (Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது
கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. 
இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles)
உள்ளது.

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றிியம்பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கட்மைைப்பு .(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசுத்தலைவர் குடியரசுதலைவர் நடுவண் அமைச்சரவை, பாருளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்்்நீதி மன்றம்்சச மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளூனர், மாநில அமைச்சரவை. மாநில சட்ட மன்றம்்அதன் அமைப்பு

 உயர்நீதின்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதி/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்திிிர்்யய ஆகியோர் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள் தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி வட்டார மொழி நீதி மன்றங்களில் மொழி

பகுதி 18 (உட்பிரிவு 352-360) 

அவசர நிலைக்கான பிரகடனம் (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

அட்டவணைகள்

  • முதலாம் அட்டவணை (Articles 1 and 4)
  • இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
  • மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6)
  • நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2))
  • ஐந்தாம் அட்டவணை (Article 244(1))
  • ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1))
  • ஏழாம் அட்டவணை (Article 246)
  • எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351)
  • ஒன்பதாம் அட்டவணை (Article 31-B)
  • பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2))
  • பதினோராம் அட்டவணை (Article 243-G) 
  • பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W) 



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக