Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்

"வாரன் பபேட்"
கூறும் அறிவுரை.....
*
1. சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3. ஒரு வருமானம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை  காப்பாற்றும்)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக