Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

திங்கள், 5 மார்ச், 2018

நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்


நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்..!


உங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்களின் நிதி நிலையை நீங்கள் தெரிந்து கொண்டு அதை நல்ல முறையில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிதிப்பிரச்சனை என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் இல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் முதல் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் உண்டான ஒரு பிரச்சனை தான்.

இது போன்ற நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.


கடவுச் சொற்கள் :


நிதி தொடர்பான அனைத்து செயல்களும் மின்னணு மயமாக மாற்றப்பட்டு வருவதால் உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட கணக்குகளின் பயனாளர்கள் தங்களின் பெயர் மற்றும் கடவுச் சொற்களை நீங்கள் மட்டுமே தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தாளில் எழுதி பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். உங்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள்.

வாரிசு நியமித்தல் :


வாரிசு நியமித்தல் என்பது அவசியமில்லாத ஒன்று எனக் கருதி பெரும்பாலும் தவிர்கின்றனர். இருப்பினும், வங்கி கணக்கு துவங்கவோ, காப்பீட்டு பாலிசி, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு அவசியம் என்பதால் அவற்றின் பயன்கள் சேர வேண்டியவர்களுக்கு எளிமையாகச் சென்றடைய உதவியாக இருக்கும்.

வாரிசு நியமனம் என்பது முதலீடுகள் வாரிசுகளுக்குச் சென்று சேர ஒரு அறங்காவலராக இருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவு ஏற்படுதல் மற்றும் உணர்வுப் பூர்வமான அதிர்ச்சி ஆகியவற்றைக் குறைத்திட உதவும்.


மருத்துவக் காப்பீடு


அதிகரித்துவரும் நோய் பாதிப்புகளான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்களிலிருந்து மீண்டுவர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு தரும் திட்டங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


காப்பீடு


ஆண்டு வருமானம் போன்று குறைந்தது 10 மடங்குக்கு எல்ஐசி யில் பாலிசி எடுத்திருப்பது அவசியம்.
கடன்தாரர்,வரி ஆணையம்,நீதிமன்றம் போன்றவைகள்கூட தங்கள் எல்ஐசி பாலிசியின் பணப் பயனை எடுத்துக்கொள்ளாதவாறு தாங்கள் வாங்கும் எல்ஐசி பாலிசியை MWP Act இன் கீழ் வாங்கவும்.

ரிட்டையர்மென்ட்


இந்தியர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. 60வயதுக்குபின்பு இன்னொரு 30 வருடங்களாவது வாழ்ந்தே ஆகவேண்டும். ரிட்டையர்மென்ட்டுகாலத்தில் நிலையான உத்தரவாதமான வருமானத்திற்கு இளம்வயதிலேயே திட்டமிடுங்கள்.
நிலையான மற்றும் அரசு உத்திரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டங்கள் எல்ஐசியில் மட்டும் உள்ளது.

ஆவணங்களைத் திட்டமிடுங்கள் :

உயில்


முக்கிய ஆவணங்களை நெறிப்படுத்தித் திட்டமிடுதல் ஒரு முக்கியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும். முதலில், உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைத்து அதனைப் பதிவு செய்து வைப்பது வாரிசுகளுக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

உங்கள் வங்கி கணக்குகள், எல்.ஐ.சி பாலிசிகள், மருத்துவம், கார் ஆகியவற்றுக்கான பாலிசிகள், நிதி திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், பிற சிறு சேமிப்புத் திட்டங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு எல்லாம் தனித்தனி கோப்புறைகள் வைத்து பராமரிக்க வேண்டும்.

இந்தக் கோப்புறைகளில், இவற்றின் துவக்கம், முதிர்வுக் காலம், முதிர்வு தொகை, மாதாந்திர கட்டணங்கள், செலுத்தும் தேதிகள் மற்றும் பிற அனைத்துத் தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிதியும் சிரமும் :


நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து சிரமமின்றி மீண்டுவர மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தோருக்கும் பேருதவியாக இருக்கும்.
  எல்.ஐ.சி மூலம் நிதி திட்டமிடுதலில் 22 ஆண்டு காலமாய் உங்கள் நம்பிக்கையான
  கி.தாமோதரன். M.Com,.LLB.,HDCM., 

+91 99408 57995, 

+91 73582 10672


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக