Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

திங்கள், 17 டிசம்பர், 2018

சாம்பாஜி ஆகர்


தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைநகரமாக விளங்கிய நகரம் தஞ்சை, நாயக்கர்களின் பிடியில் இருந்தது. கி.பி.1674 ஆம் ஆண்டு மராட்டிய சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரன் வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றினான். மாராட்டிய சிவாஜியின் ஆதரவுடன் மராத்தியர்கள் தஞ்சை மண்ணில் நிலை கொண்டனர். வெங்கோஜியைத் தொடர்ந்து, சாஹூஜி -1. சரபோஜி -1 துக்காஜி, பிரதாப்சிங், துக்கோஜி, சரபோஜி-2 ஆகியோர் தஞ்சையை ஆண்டனர். 

இரண்டாம் சரபோஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலத்தில் (17
ஆம் ஆண்டு) இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட் வ அவர்களுடன் அடிமையாக இருந்து  சுகமாக வாழவே விரும்பினான்.  சரபோஜி உணவுப் பிரியரும்கூட. 

தஞ்சை அரண்மனையில்  சைவ உணவுக்கு ஒரு சமையலறை, அசைவ உணவுக்குத் தனிச் சமையலறை, ஆங்கிலேய உணவுக்கு ஒரு சமையலறை எனத் தனித்தனிச் சமையலறைகள் இருந்துள்ளன. சமையலில் நிபுணத்துவம் பெற்றவர்களைப் பணிக்கு வைத்திருந்தார். தஞ்சை அரண்மனை  சமையற்காரர்கள் சிலர், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இங்கிலீஸ் சமையலையும் கற்று, அதிலும் மாஸ்டராகத் திகழ்ந்துள்ளனர். அதுபோல், மராத்திய உணவு வகைகளில் திறமை வாய்ந்த இரு சமையற்கலைஞர்களையும் சரபோஜி, ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

அரண்மனையில் தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளை சமையற்காரர்கள் சொல்லச்சொல்லக் குறிப்பெடுத்து வைக்கும் வழக்கமும் சரபோஜிக்கு இருந்துள்ளது. சரபோஜியின் அரண்மனையில் பணியாற்றிய நாராயண அய்யா, சிம்னு அப்பா, பட்லர் வெங்கட்ஸ்வாமி ஆகியோர் வாய்மொழியாகக் கூறிய விஷயங்கள் கையெழுத்தாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமையற்காரர்கள் எந்த உணவைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சமையல் முறை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், விழாக்காலங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் முதற்கொண்டு 500 குறிப்புகள்' சரபேந்திர பக்ஷாஸ்திரம் ' என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

சரி... சாம்பார் உருவானதாகச் சொல்லப்படும் கதைக்கு வருவோம். கடந்த ( 1684- 1712) காலகட்டத்தில் தஞ்சையை சாஹூஜி ஆண்டு கொண்டிருந்தான். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன்  இவன் சாஹூஜிக்கு  'அமிதி ' என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியைப் பயன்படுத்தி புளிக்குழம்பை அவர்கள் சமைக்கவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் இந்த வகைப் புளி அதிகம் விளைகிறது. ஒருநாள் அரண்மனை போஜன சாலையில், கோகம் இல்லாமல் போய்விட்டது.

அந்தச் சமயத்தில் தமிழகத்தில் விளையும் புளியம்பழத்தை வைத்து, துவரம்பருப்பு, காய்கறி, மசாலா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு குழம்பு வைத்திருக்கிறார்கள். அதுதான் சாம்பார். மன்னர் சாஹூஜிக்கு சாம்பார் மிகவும் பிடித்துப்போனது. மராட்டிய அரசின் இரண்டாவது மன்னரான ஷாம்பாஜி, (மாராட்டிய சிவாஜியின் மூத்த மகன்) தஞ்சைக்கு ஒருமுறை விருந்துக்கு வந்துள்ளார். அன்றைய தினத்தில், இந்த வகைக் குழம்பைத் தயாரித்துப் பரிமாறியுள்ளார். விருந்துக்கு வந்த அவருக்கும் சாம்பாரின் சுவை பிடித்துப்போனது. அந்தக் குழம்புக்கு  'ஷாம்பாஜி' பெயரையே சூட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் சாம்பாருக்கு அடிப்படையாம். இப்படித்தான் சாம்பார் தமிழகத்துக்கு வந்துள்ளது.

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் ஆகிய இரு புத்தகங்கள்  மராட்டிய உணவு செய்முறையை விளக்குபவை. இரண்டாம் சரபோஜி காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன.

சுருக்க வரலாறு

தஞ்சாவூரை மராத்திய மன்னர் ஷாஜி ஆண்டுகொண்டிருந்தார். அவர் சிவாஜியின் சகோதரர். அப்பொழுது சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சை விஜயம் செய்தார். அங்கு சாம்பாஜி மாஹாராஷ்டிர உணவான டாலை சாப்பிட ‌விரும்பினார். அதில் ஒரு பிரச்சினை எழுந்தது. மாஹாராஷ்டிர டாலை தயாரிக்க பயன்படும் பதார்த்தங்கள் முக்கியமாக கோகம் என்னும் பழம் தஞ்சையில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக புளியை உபயோகித்து டாலை தயாரித்தனர். சாம்பாஜி உட்பட எல்லோரும் அதை விரும்பி உண்டனர். அந்த உணவு தஞ்சை அரச குடும்பத்தின் ஆஸ்தான உணவாகவே மாறியது. சாம்பாஜி ஆகர் (ஆகாரம்/உணவு) என்று அழைக்கபட்டது. நாளடைவில் அந்த பெயர் சுருங்கி சாம்பார் என்று ஆனது. இந்த விஷயம் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள மராட்டிய அரசவை குறிப்புகளில் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக