Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

புதன், 21 பிப்ரவரி, 2018

வெற்றி பாதையில் தான் செல்கிறீர்களா !

வெற்றி பாதையில் தான் செல்கிறீர்களா !
🍭 நாம் ஒரு வாய்ப்பாளரிடம் வாய்ப்பை பெறுவதற்கு என்ன என்னமோ செய்கிறோம். ஆனால் நாம் செய்யும் அனைத்தும், பாலிசி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறதா என்று ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கிறோமா?

இல்லையெனில் நாம் சிந்தித்து பார்ப்பதற்கான சரியான தருணம் இதுதான்.

🍭 நாம் அனைவருக்கும்  அதிக பாலிசிகளை விற்று அதிக கமிசன் ஈட்டவேண்டும் , Club member ஆக வேண்டும்
என்ற இலட்சியம் இருக்கும் ஆனால் நாம் அந்த இலட்சியத்தை நோக்கித்தான் செல்லுகிறோமா என்று நினைத்து பாருங்கள்.

🍭 சில சமயங்களில் நமது இலட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் நமக்கு வெற்றி கிடைக்காமல் போயிருக்கும். எனவே அந்த இலட்சியத்தை கைவிடுவது நல்லதா?

🍭 நமக்கு ஏற்பட்ட சில தோல்விகளால் நமது இலட்சியத்தை விட்டுவிட்டு, கிடைக்கும் சிறு வெற்றியை ஏற்றுக் கொண்டால் அது நமக்கு திருப்திகரமாக அமையுமா? நிச்சயம் அமையாது.

🍭 நமது முகவாண்மை பனியில்் கவனம் செலுத்த முடியாமல் நமது இலட்சியத்தை அடையவும் முடியாமல் நமது வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்.

🍭 எனவே நமது இலட்சியத்தை அடைவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் சில தோல்விகளால் மனம் துவண்டுவிடாமல், அந்த தோல்விகளை நமது அனுபவமாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

🍭 இலட்சியத்தை அடைவற்கு, நம்மை அனைத்து விதத்திலும் நாம் நன்றாக தயார் செய்துக்கொள்ள வேண்டும். தக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அந்த வாய்ப்பை நழுவவிடாமல் அதில் வெற்றி பெற வேண்டும்.

🍭 சில சமயங்களில் நம்மை விட இவன் அறிவில் குறைந்தவனாக இருக்கிறான். இவனுக்கு மட்டும் எப்படி இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்தது? என்று நினைக்கலாம்.

🍭 ஆனால் நிச்சயமாக நம்மிடம் இல்லாத ஆற்றலையோ இல்லை சிறந்த பண்புகளையோ அவன் பெற்றிருக்கலாம் என்பதை உணரவேண்டும்.

🍭 நம்மில் பலபேர் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, அதனால் தான் நான் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறேன் என்று கூட நினைக்கலாம். ஆனால், நாம் அதிர்ஷ்டத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நம் மீது வைத்து பாருங்கள் நிச்சயம் வெற்றி நமக்கே!!
ஆண்டு இறுதியில் சிறுவாய்ப்பையும் நழுவவிடாமல் புது வணிகம் புரிந்து மன்ற தகுதிநிலையில் உயர்வோம்.
எல்ஐசியை காப்போம்...
முகவர்களை பாதுகாப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக