Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மனிதர்களாக பிறந்த அனைவரிடமும் இருக்க வேண்டியவைகள்


மனிதர்களாக பிறந்த அனைவரிடமும் இருக்க வேண்டியவைகள்

தைரியமும், பொறுமையும்

எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டையும் இழந்துவிட கூடாது. அது பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி, தைரியமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும்.

கவனம் :

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளிலும், ஈடுபடும் செயல்களிலும் எல்லா தருணத்திலும் கவனமாக இருத்தல் அவசியம்.

நல்ல நோக்கம் :

நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.

தளர்ந்துவிடக் கூடாது :

எந்த ஒரு தருணத்திலும் சரி, கடுமையான போராட்டங்களுக்கு தீர்வுக் கிடைக்கவில்லை என்றாலும் கூட நகர்ந்து செல்லாமல் கடுமையாக வேலை செய்ய தயங்க கூடாது.

ஆபத்து சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்ற மனப்பக்குவம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

பகிர்தல் :

உணவு, மகிழ்ச்சி, பணம் என எதுவாக இருந்தாலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும்.

இரகசியம் :

இரகசியங்கள் காக்க தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டும். உள்ளொன்றுமாக, புறமொன்றுமாக இருத்தல் கூடாது.

விடா முயற்சி :

வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் பொறுமையும், விடா முயற்சியும் கொண்டிருக்க வேண்டும். அது உறவாக இருப்பினும் சரி, வேலையாக இருப்பினும் சரி.

நல்லவை, கெட்டவை :

தேவையற்றதை மறக்கவும் கற்றிருக்க வேண்டும். வேண்டாதவற்றை எண்ணி எண்ணி வருந்தும் குணம் இருத்தல் கூடாது. அதே போல நன்மை தரும் செயல்களையும், நல்லவர்களையும் மறந்துவிட கூடாது.

பணிவு :

பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும். பணம், வெற்றி காரணம் காட்டி அகம்பாவம் வெளிப்படுத்த கூடாது. அகம்பாவம் நல்லறிவு, சிறப்புகள் போன்றவற்றை அழிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

இலட்சியம் :

இலட்சியம் கொண்டிருக்க வேண்டும், தன்னை சுற்றி இருப்பவர்களிடம் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

திறமை :

தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக, தன்னால் சாதிக்க முடியும் என்பதற்காக, மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிட கூடாது.

நல்வாழ்வு :

உணவு மீதும், உடல் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களையும் இது சார்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

சோம்பள் :

எப்போதும் தூங்கிக்கொண்டே சோம்பேறி தனமாக இருத்தல் கூடாது. எந்நேரமும் சுறுசுறுப்பாக செயற்படக் கூடிய நபராக இருக்க வேண்டும்.

மரியாதை :

ஒரு மனிதன் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பெரியவர்கள், முன்னோர்கள், சான்றோர்கள் என அனைவருக்கும் மதிப்பளிக்க தெரிந்த குணம் இருக்க வேண்டும்.

ஏமாற்றுதல் :

தன்னை விட எல்லா வகையிலும் வலுவற்றவனிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களை ஏமாற்றுதல், பணம் பிடுங்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக