ராமு ஒரு முதியவர் அவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். ராமு அவர்களின் உதவியாளர் ஷியாம் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். ராமுவின் உதவியாளர் ஷியாம் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக் கண்டான். மருந்து வாங்கினான்். மருந்துகளின் மொத்த விலை 60ரூபாய் வேலையாள் 100 ரூபாய் நோட்டைத் தந்தான்.
என்னிடம் சில்லறை இல்லை.. மீதி 40ரூபாயை நாளை காலை வந்து வாங்கிக் கொள்கிறாயா? என்று கேட்டார்.
சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் உதவியாளர் ஷியாம் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தார். அதையே இந்தக் கடையிருக்கும் இடத்தின் அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்
மறுநாள் காலை அந்த தெருவுக்கு உதவியாளர் ஷியாம் வந்தான். அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான். நான் உங்க கடையில் நேற்று இரவு வந்து மருந்து வாங்கினேன். நீங்கள் எனக்கு 40 ரூபாய் மீதி தர வேண்டும் என்றான்.
கடைக்காரர் நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து கடையில்லை. எனக்கு தர வேண்டிய 40 ரூபாயை ஏமாற்ற மருந்து கடையை இரவோடு இரவாக மளிகைக்கடையாக மாத்திட்டீங்களா? என்று கேட்டான்.
இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேற்று இரவு நீங்கள் என்னை பார்க்கவில்லை என்றார் கடைக்காரர். அதற்கு ராமுவின் உதவியாளர் ஷியாம் நீ தாடி ஒட்டி வைத்துக்கொண்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாற்ற முடியாது. எனக்கு தர வேண்டிய 40ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டான்.
இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன். இது நிஜ தாடி. நம்புங்க. இரவு நீங்க இங்கு வரவில்லை. நீங்க வாங்கிய கடை வேற கடையாக இருக்கும். நன்றாக யோசித்து பாருங்க என்றார் கடைக்காரர்.
ராமுவின் உதவியாளர் ஷியாம் திடீரென கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தான். தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் தாடி வரவில்லை.
சரிஇ நீங்க 40ரூபாயை கொடுக்க வேண்டாம். இரவோடு இரவாக மருந்துக் கடையை மளிகைக் கடையாக மாற்றியது எப்படி என்று சொல்ல வேண்டாம். ஆனால் ஒரே இரவில் எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க. அதை மட்டும் தயவு செய்து சொல்லி விடுங்கள் என்றான். கடைக்காரர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக