சைவ வைணவ போராட்டங்கள்
ஆசிரியர் சிகரம். செந்திநாதன்
வெளியீடு ; சந்தியா
விலை 165
''மரபு எங்கிருந்து, எதிலிருந்து துவங்குவது'' என்பதே சபரிமலையில் விவகாரம். இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வதென்றால் ''அதிகாரத்திற்கு ஆகமம் அடங்கும்'' இதற்கு எளிய எடுத்துக்காட்டு, சைவ கோவிலில் பெருமாள் இருப்பதும் வைணவக்கோயிலில் சிவன் இருப்பதுமே. மரபு மக்காச்சோழம், ஆகமம் விதி என்பதெல்லாம் அதிகாரத்தின் அதாவது ஆட்சியாளர்களின் கைகளுக்கு கீழே. அதனால் தான் சைவத்தின் அடையாள தலமான தில்லையில் வைணவத்தின் அடையாளமான தீர்தமும், வைணவ அடையாளமான பல பெருமாள் கோயிலிலில் விபூதியும் கொடுப்பார்கள். இதைவைத்துப்பார்க்கும் போது சபரி மலைப்போராட்டம் என்பது சைவத்திற்குள் சைவ போராட்டமா? அல்லது கோயில் எது, மடம் எதுஎனத்தெரியாத இழிகூட்டத்தாரின் கூச்சலா? என்பது புரியவில்லை. இந்தக்கூச்சல் கேட்டபோது நான் வாசித்த நூல் சைவ வைணவ போராட்டங்கள். இதை படித்தபோது தான் தெரிந்தது மரபு என்பது ஆச்சியாளர்கள் வைத்து அதைப்பிடித்து தொங்குவது அதைவைத்து பொருளீட்டும் கும்பல் என, புரிந்தது.
நூலில் வைணவ சைவ சண்டையை சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை ஓரளவிற்கு தொகுத்துள்ளார். பல்லவர் காலத்திலே சைவம் தளைத்தோங்கியது. ஆனால் நந்திவர்மப் பல்லவனே வழக்கின் மேல் வழக்காடிகளை வைத்திருக்கும் தில்லை கோயிலில் பெருமாள் கோவிலை கட்டினான் என்ற சான்றை படிக்கும் போது அதிகாரத்திற்கு ஆகமம் காலம் தொட்டு அடங்கி இருப்பதை உணர முடிகிறது.
குலோத்துங்க சோழர் காலத்தில் சைவமும் வைணவமும் சண்டையிட்டது. அரச மதமான சைவம் மக்களை ஓடுக்கியது. இதனால் ராமனுசரின் விசிட்டாவைத தத்துவத்தின் மயங்கி வைணத்தின் பக்கம் சாய்ந்தனர். இங்கிருந்து தான் வைண சைவ சண்டை வெளிச்சத்திற்கு வருகிறது. குலோத்துங்கன் ராமனுசரை விரட்டுகிறான் அவன் உயிர்தப்பி மேலக்கோட்டையில் யாதவ சாம்ராஜ்சியத்தில் தஞ்சம் புகுறான். இப்படி வரலாற்றை அள்ளித்தெளித்து துவங்கும் நூல், பன்னிரு திருமுறைகள் சமற்கிருந்த மொழியாக்கம் செய்யப்பட்டது என்றும் சோழர்கள் சைவ வெறியர்களாக இருந்ததற்கு நாவுக்கரசர் (திரு) எழுதிய ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்ற வரிகளை சான்றாக வைக்கிறது.
சோழகாலத்தில் சிவஞ்சானசித்தியாரின் சுபக்கம், பரபக்கம் என்ற இரண்டு நூல். இதில் பரபக்கத்தில் மனைவிக்காக சிவபக்தனான ராவணனை அழித்து சிவனிடன் பாவ மன்னிப்பு கேட்டான் ராமன் என திட்டிதீர்ப்பது வைணத்தை ஒடுக்க எழுத்தப்பட்டவையே என சான்றளிக்கிறார். இருந்தாலும் சைவ மடங்கள் தமிழை தூக்கிப்பிடிப்பது போல் தெரிந்தாலும் சமற்கிருந்தமே வழிப்பாட்டு மொழியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட தயங்கவில்லை. திருவடுதுறை ஆதின மடம் சமற்கிருத்தை ஏற்று பரப்புரை செய்தது என்று தமிழுக்காக வாதிடுகிறார் ஆசிரியர்.
சைவத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடியவர் நாவுக்காரர். அதைப்போலவே வைணவத்தில் நம்மாழ்வார், மத்தவாச்சாரியர்கள் என்று வரலாற்றை தூக்கி நிறுத்தும் இந்த நூல் பக்தி இலக்கிய காலம் என்பது ஆரிய மதத்திற்கு எதிரானது என சான்றுரைக்கிறார். ராமனுசர் புரட்சியாளர் என எல்லோரும் எழுதும் போது ''அவர் எழுதிய ஸ்கிரந்தகம் தமிழில் இல்லை. அதில் திருகோட்டியூரில் வைணகுண்ட தரிசனத்தை சாமானியன் பார்க்க அழைத்து சென்றதாக ஒருவரிகூட இல்லை. அதே போல் ஆரியன் அல்லாதவன் பூநூல் அணிந்தாலும் இந்த பிறவியில் ஆரியனாக முடியாது. இறைவனை தொழுதால் அடுத்த பிறவியில் ஆரியனாக பிறக்கலாம். இது ஆரிய பெண்களுக்கும் பொருந்தும் என்றும், நாத்திகத்தை நரபலி என்றும் சமணத்தை ஆனை என்றும், பவுத்தத்தை இருட்டு என்றும் சைவத்தை கபாலிகள் என்றும் ஆதிசங்கரரின் அத்வைத்தத்தை மலைப்பாம்ம்பு என்றும் ராமனுசர் சொல்லியுள்ளதை அவரின் நூலிருந்து சான்று தருவது ஆசிரியரின் வாசிப்பு நுணுக்கத்தை காட்டுகிறது.
பாண்டியர் காலத்தில் சைவவைணவ சண்டை
பொதுவாக பாண்டியர்கள் சைவர்களாக இருந்தாலும் 8,9ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நெடுஞ்சசையன் பராந்தகன் வைணவன், அடுத்து வந்த வரகுணபாண்டியன் சைவன் அடுத்து ஆட்சி செய்த கூன்பாண்டியன் சமணன் பின்னர் சைவம் மாறவர்ம சுந்தரபாண்டியன் (இவனே சோழர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தவன்) சைவம், சடையவர்மசுந்தர பாண்டியன் வைணவன் என பாண்டிய மண்டலம் பல மார்க்கங்களை அனுசரித்ததை தெளிவுபடுத்திக்காட்டுகிறார்.
வைணவத்தில் இன்றும் பேசப்படும் பொருள் 'தென்கலை (y) வடகலை (u)' இந்த வடிவங்களில் நெற்றியில் நாமம் போடுவார்கள் என்பதை குறிப்பிடும் நூல் இவர்களை சண்டை வெளிச்சத்துக்கு வந்தது 1882ல். அப்போது தென்கலையினர் தமிழில் உள்ள பாசுரங்களை வழிப்பாட்டில் பாடவேண்டும் என்ற கோரிக்கையை நிராகத்ததே வழக்கின் சாரம். இதில் லண்டன் கோர்ட் வரை வழக்காடி தமிழை நிலைநாட்டியுள்ளனர் என பெருமைப்படும் ஆசிரியர் இப்படி தமிழுக்காக வாதாடியவர்களே எழுத்து வடிவத்தில் சமற்கிருத்தை கொண்டுவந்து மணிபிரவால நடையை உருவாக்கினார்கள் என சுட்டிக்காட்டுகிறார்.
நாயக்கர் ஆட்சியில்
இவர்கள் ஆட்சியில் வழிபாட்டில் தமிழ் இரண்டாம் இடத்தில் கூட இல்லை. முருகன் வழிபாடு ஸ்கந்த வழிபாடாகவும் 'ஸ்கந்தபுரணம்' என திருத்தி தமிழில் புகுத்தினார்கள் என வருத்தப்படும் ஆசிரியர் இவர்கள் காலத்திலே தமிழை தூக்கி பிடிக்க தனிமனிதர்களாக பலர் போராடியதை பட்டியலிடுகிறார். அவர்களின் முக்கியமானவர் அருணகிரிநாதர். அடுத்து சிவபிரகாசசுவாமிகள் தமிழே எம்மொழியென இவர்கள் முழங்கியுள்ளதை பட்டியல் போடுகிறார். இவர்களைப்போலவே சித்தர்கள் ஆரியத்தையும் சாதியத்தையும் எதித்து குரல் கொடுத்து தோற்று மலைகளில் ஓடிய புரட்சியாளர்கள் அவர்கள் பல போராளிகளை வைத்தியர் என்ற போர்வையில் உருவாக்கினார்கள் என போராளிகளுக்காக நூலாசிரியர் முழக்கமிடுகிறார்.
மாராட்டியர்கள்
இவர்கள் காலத்தில் தமிழை ஒதுக்கியே வைத்தனர். தியாகராயர் என்பவரை வைத்து தமிழில் இருந்த சதிராட்ட அடவுகளிய தெலுங்கில் கீர்த்தனையாக்கி அதை வரலாறராக்கி விட்டனரென ஆதங்கப்படும் ஆசிரியர் மன்னர் சொக்கநாதஆட்சியில் வாழ்ந்த தாயுமாணவரையும் குறிப்பிட தவறவில்லை.
பிரிட்டீஷ் ஆட்சி
ஆரியத்தை அப்பட்டமாக எதித்தவர் வள்ளளார். இவர் பிரிட்டீஷ் ஆட்சியை ஒழிக என எழுதிய கவிதைகளை குறிப்பிடுகிறார். தோல்சீலை போராட்டம் செய்த வைகுந்தசாமி பிரம்ம சபை எப்படி பிரம்ம சமாஜமானது என கேள்வி எழுப்பு நூலாசிரியர் ஆதிசங்கரரின் அத்வைத்ததை விட எங்கள் அப்பர் சம்மந்தரின் தேவாரம் பழையது. ராமனுசரின் விசிட்டா வைத்தத்தை விட முந்தியது எங்கள் பிரபந்தம் என நமது மண்டையில் கொட்டுகிறாது இந்த நூல் சிறிய நூல் என்றாலும் பரந்து பட்ட தகவல்கள் பெருத்த வாசிப்பாளர்களுக்கு இந்த தீனி குறைவு என்றாலும் நொறுக்குத்தீனியாக அமையும் எனப்பரிந்துரைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக