இந்தியாவில் உள்ள 380 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 65 சதவீத திட்டங்கள் கடந்த ஒரு வருடமாக நட்டத்தினையே அளித்துள்ளன என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
கட்டுமான துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக எச்எஸ்பிசி இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் ஈக்விட்டி ஃபண்டு 30.66 சதவீத நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது என்றும் வேல்யூ ரிசர்ச் தரவுகள் கூறுகின்றன.
நட்டம் அளித்த லார்ஜ் கேப் ஃபண்டு திட்டங்கள்
ஜேஎம் கோர் 11 ஃபண்டு, ஐடிபிஐ இந்தியா டாப் 100 ஈக்விட்டி டண்டு, எஸெல் லார்ஜ் கேப் ஈக்விட்ட் ஃபண்டு போன்ற லார் கேப் ஃபண்டு திட்டங்களும் சென்ற ஒரு ஆண்டி -6.7 முதல் -9.7 சதவீதம் வரை நட்டம் அளித்துள்ளன.
சரிந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களின் வருவாய்
மியூச்சுவல் ஃபண்டில் மிட் கேப் திட்டங்கள் சராசரியாக -8.58 சதவீதமும், ஸ்மால் கேப் திட்டங்கள் -11.11 சதவீதமும் நட்டத்தினை அளித்துள்ளதாக வேல்யூ ரிசர்ச் தரவுகள் கூறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்
2017-2018 நிதி ஆண்டில் 14,200 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து இருந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 10,080 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இதில் பல சில்லறை முதலீட்டாளர்கள் நட்டம் அடைந்துள்ளனர்.
பங்குகள்
2018-ம் ஆண்டுத் தொடங்கியது முதல் 80 சதவீத பங்குகளின் மதிப்பு் சரிந்தே உள்ளன. டெக்னாலஜி மற்றும் pharma உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த சில நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபத்தினைப் பெற்றுள்ளன. இதற்கு ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக