Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!
குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!
அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!! 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,
அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!
தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!! 
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!
அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!! 

நீங்கள் எப்படிப்பட்டவர்
ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில்,      தண்ணீரும் இருந்தன.....! 
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!

"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!
"குடித்து விட்டு " 
மறுபடியும் ஜக்கில்,
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டு செல்லவும்."...!!!

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!
அதில் தண்ணீர் ஊற்றினால்..... ,
அது இயங்குமா...,
தண்ணீர் வருமா....,,
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!

அது இயங்கா விட்டால்....,
அந்தத் கொஞ்ச தண்ணீரும் வீணாகி விடும்.....!!

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,
தாகமும் தணியும்......!!
உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!

அந்த பயணி யோசித்தான்....!!

தண்ணீரை குடித்து விடுவதே ....., 
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!

ஆனால் ..
மனது நியாயமாக யோசித்தது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......, அந்த பம்ப் இயங்குவதாக இருந்து,
அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரை நான் குடித்து விட்டால் ,
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,
எந்த பயனும் இல்லாமல் போக....,
தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!! 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.....!

ஆனது ஆகட்டும் என்று......,
அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,
அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!! 
தண்ணீர் வர ஆரம்பித்தது....!!

தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,
தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!
அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,
அவன் மனம் நிறைந்திருந்தது.....!!

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,
பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டு போக வேண்டும்......!!
எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!

 "அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,
"இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!

உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்.
ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே ...
பொது நலத்துடன் இருப்பதால் தான் என்னவோ.. இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...
நீங்கள் எப்படிப்பட்டவர்??

👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக