மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஒரு பொதுவான கண்ணோட்டம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பல முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்து, பங்குச் சந்தை, பத்திரச் சந்தை போன்ற பல்வேறு
நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யும் ஒரு அமைப்புதான் மியூச்சுவல் ஃபண்ட்.
இந்த நிதியை நிர்வகிப்பவர் ஒரு நிதி மேலாளர். அவர், முதலீட்டாளர்களின் இலக்குகளுக்கு ஏற்ப, எந்தெந்த நிறுவனங்களில், எவ்வளவு தொகையை முதலீடு செய்வது என்பதை தீர்மானிப்பார்.
நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படுதல்: நிதி மேலாளர்கள், அனுபவம் மற்றும் சந்தை அறிவு கொண்டவர்களாக இருக்கலாம் . அவர்கள், சந்தை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, சரியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
பல்வகைப்படுத்தல்: ஒரே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதை விட, பல நிறுவனங்களில் முதலீடு செய்வது, நட்டத்தை குறைக்கக்கூடும்
* குறைந்த அளவு முதலீடு: மாதம் ரூ.500 கூட மாதா மாதம், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
* தொடர்ச்சியான முதலீடு: Systematic Investment Plan (SIP) என்ற முறையில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். இது, முதலீட்டை எளிதாக்கும், என்ற நம்பிக்கை நிலவுகிறது
மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்
ஈக்விட்டி ஃபண்ட்: இந்த ஃபண்ட் இல் பெறபட்ட பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இந்த ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட் என்று பெயர்.
டெட் ஃபண்ட்:பத்திரங்கள் மற்றும் கடன் தாள்களில் முதலீடு செய்யும் ஃபண்ட். டெட் ஃபண்ட் எனபடுகிறது
பாலன்ஸ்ட் ஃபண்ட்: ஈக்விட்டி மற்றும் டெட் இரண்டிலும் முதலீடு செய்யும் ஃபண்ட்.
Money Market ஃபண்ட்: குறுகிய காலத்திற்கான முதலீடுகளுக்கு ஏற்ற ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
* இலக்குகளை நிர்ணயித்தல்: எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்டத்தை தாங்கும் திறன்:பொதுவாக பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் ஏற்ற இறக்கத்துடன் தொடரும். நிர்னயத்த இலக்கை எட்டும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இந்த முதலீடுகள் சில சமயம் நஷ்டத்தைக்கூட தரலாம். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் எவ்வளவு நஷடத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
நிதி மேலாளரின் செயல்பாடு: ஃபண்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நிதி மேலாளரின் செயல்பாட்டை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முடிவு
மியூச்சுவல் ஃபண்ட் என்பது, நீண்ட காலத்திற்கு பணத்தை பெருக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு முன் இருக்கும் பல வழிகளில் மியூச்சுவல் ஃபண்டும் ஒரு வாய்ப்பாகும்.
ஆனால், முதலீடு செய்வதற்கு முன், நன்கு ஆராய்ந்து, தகுந்த நிதி ஆலோசனை பெறுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன், நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
மேலும் தகவல்களுக்கு:
* SEBI: Securities and Exchange Board of India
* AMFI: Association of Mutual Funds in India