செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure. (KURAL 112) Wealth earned by a person using fair means will protect not only the person but also his future generations.' Thinking retrospectively, we can definitely remember those who earned their wealth by their own hard work and dedication. Only a few of the infamous are also remembered as their deeds are truly devastating.
Trust = LIC OF INDIA

திங்கள், 20 ஜனவரி, 2025
How to register NEFT details in LIC online
வியாழன், 28 மார்ச், 2024
நன்றி சொல்லுங்க.....
மனித பண்புகளிலேயே மிகஉயர்ந்த பண்பு நன்றி கூறுதல்.
நாம் பிறருக்கு கூறும் நன்றியால் என்ன லாபம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நீங்கள் நன்றி கூறும் இடத்தில் உயர்ந்து நிற்கிறீர்கள். அந்த உயரம் உங்களுக்கு தெரியாது. நன்றி கூறினால் உங்கள் இமேஜ் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியும் உயரும்.
நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது. உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்து விட வேண்டும்.
நன்றி, பாராட்டு உரியவருக்குக் கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதைக் கூடுதல் மதிப்புடன் நமக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்.
நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.
நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.
உங்களது நன்றியைத் தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டி விட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்.
கடைசி வரை அது தன் சுபாவத்தை விடவில்லை. அதுபோல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்.
நன்றி சொல்லும்போது அதை உண்மையாகச் சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்
நன்றி சொல்லும்போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணு முணுக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள். நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.
வாழ்க்கையில் இனி சந்தர்ப்பங்களில் நாம் நன்றி சொல்ல வேண்டிய தருணங்களில் நன்றி சொல்வோம். வாழ்க்கையில் உயர்வோம். நன்றி!
திங்கள், 4 மார்ச், 2024
எப்போதும் வணிகத்தில் வெற்றியாலராக இருக்க...
எப்போதும் வணிகத்தில் வெற்றியாலராக இருக்க...
💐முதன் முதலில் வணிகம் துவங்கும்போது எவ்வளவு ஆர்வமும், வேகமும் இருந்ததோ அதே அளவு எப்போதும் இருந்தால் வெற்றிதான்.
💐 தூய்மை,ஒழுக்கம்,நேர்மை இவை வெற்றிக்கு மிக அவசியம்
💐 வணிகம் என்பது வெறும் வேலையும்,கடைமையும் மட்டுமல்ல அது ஒரு தவம், அது ஒரு கலை.
💐காத்திருத்தலும், நீடித்திருத்தலுமே வணிக வெற்றிக்கு பிரதான காரணமாகும்.
💐ஒரு நாளைக்கு எத்தனை முடிவெடுக்கிறோம், எத்தனை சரியான முடிவு, அதில் எத்தனை செயல்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றிக்கான வாய்ப்பாடே அடங்கியுள்ளது.
💐போரைப்போல் இறுதி வெற்றிக்காக கடுமையாக போராடவேண்டும், இறுதி என்பதற்க்கு முடிவே இல்லை.....
செவ்வாய், 30 ஜனவரி, 2024
அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன
கிழக்கிந்தியக் கம்ப்பெனி உருவாக காரணம் என்ன?
திங்கள், 29 ஜனவரி, 2024
ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?
ரிட்டையர்மென்ட் கார்பஸ் தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளவும் ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்யவும் முதன்மை நிதி திட்டமிடுநர் கி தாமோதரனை (+91 7358210672) கலந்து ஆலோசிப்பது சிறந்தது.
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல ரிட்டயர்மென்ட் கார்பஸை உருவாக்க சிறிய தொகையை இளம் வயதில் இருந்தே முதலீடு செய்து வந்தால் போதும்’