Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தனி நபர் விபத்துக்காப்பீடு

திடீரென ஏற்படும் விபத்துக்களால் மனிதர்கள் சந்திக்கும் துயரங்க ளும், பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்களும் ஏராளம். இதற்கு ஒரே தீர்வு, தனி நபர் விபத்துக்காப்பீடு பாலிசி எடுப்பதே.
இந்த பாலிசி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? யார், யாருக்கெல்லாம் பாலி சி எடுக்கலாம்?, கிளைம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அதிகபட்சமாக எவ்வளவுக்கு இந்த பாலிசியை எடுக்கலாம்?,

கட்டாய பாலிசி!

”டூ வீலர் ஓட்டத் தெரிந்த, தெரியாதவர்கள் முதல் நான்கு சக்கர வாக னங்கள் ஓட்டுகிற அனைவரும் இந்த தனிநபர் விபத்துக் காப்பீ டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். விபத்துகளினால் ஏற்படும் பணக் கஷ்டங்க ளை ஈடு செய்வதே இந்த தனிநபர் விபத்துக் காப் பீட்டின் நோக்கம். 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் இந்த விப த்துக் காப்பீ ட்டை எடுத்துக் கொள்ள முடியும்.

யார், யாருக்கெல்லாம் எடுக்கலாம்?

நிறுவனம் அவர்களின் ஊழியர் களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுக்கலாம்.
ஒரு கணவன் தனது மனைவிக்கும், தனது குழந்தைகளுக்கும் இந்த பாலிசியை எடுக்கலாம். ஒரு மனைவி, தனது கணவ னுக்கும், குழந் தைகளுக்கும் எடுக்கலாம்.

பிள்ளைகள் பெற்றோருக்கு எடுக்கலாம். ஆனால், பெற்றோர்கள் அவர்களை சார்ந் திருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே எடுக் க முடியும். தனியாகச் சம்பாதிக்க
ஆரம்பித் திருந்தால், அவர்களாகத்தான் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி எடுப்பது?

இந்த பாலிசியை எடுக்க விரும்புகிறவர்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்று அவர்கள்தரும் ‘புரபோஸல் ஃபார்ம்’ என்னும் படிவத் தை வாங்கி அதில் கேட்டி ருக்கும் விவரத்தை உண்மையாக பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.
ஒருவரின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரே ஜ் கிடைக்கும். அவரவ ர் விருப்பத்திற்கேற்ப தேவைப்படுகிற அளவு க்கு இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

அவரவர்களின் சம்பளத்திற்கேற்ப கிடைக்கும் காப்பீட்டுத் தொகை மாறுபடும்.
ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருட பிரீமியம் 60 ரூபாய் மட்டு மே. குறைந்தபட்சம் ஒருவர் 25,000 ரூபாய் வரைக்கும் இன்ஷூரன்lஸ் எடுத்துக் கொள்ள முடியும்.
பிரீமியங்களை காசோலைகளாக வோ, பணமாகவோ பாலிசி எடுத்த அலுவலகத்திற்கு நேரில் வந்து செலுத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை இணையதளம் வழியாக கட்டுவதற் கு அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது.

ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடம் வரை இந்த காப்பீட்டு பாலிசி யை எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அதிக ஆண்டுகள் கட்டி னால் பிரீமியம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக