Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருநெல்வேலி

திருநெல்வேலி கோட்டம்...

சற்றே

1992 ல் கோட்டம் பிறந்தது.

திரு. எஸ். நரசிம்மன் அவர்கள்
முதல் முதுநிலைக் கோட்ட மேலாளர். வரவேற்றது இன்றும்
நினைவில்.

தொடக்கம் டவுணில்
MH கட்டிடத்தில்.

ரத்னா தியேட்டரின் ஒருபுறம்
எங்கள் கிளையும், கிளை 2ம்

மறுபுறம்
கோட்டம்.

திரு G.மனுவேல்ராஜ் அவர்கள்
முதல் வணிக மேலாளர்.

திரு சொக்கலிங்கம் அவர்கள்
முதல் விற்பனை மேலாளர்.



இன்று பலவித வளரச்சி.
பலரும் வியக்கும் வளர்ச்சி!

இந்திய வரைபடத்தில்
இந்தியாவை கீழே இருந்து
தாங்கும் திருநெல்வேலி
எல்.ஐ.சி.வரைபடத்திலும்
தாங்கி நிற்பதுமட்டுமல்ல,
உயரந்தும் நிற்கிறது.
மேலே உள்ளவரை குனிந்து
பார்க்க வைத்தது.

தென்கோடி தூத்துக்குடி

தெற்கு எல்லையை காக்கும்
கன்னியாகுமரி,

குற்றால அருவியில் குளித்தது
போல் இருக்குதா என்ற கவிஞரின் உவமைக்கு இலக்கணமான
குற்றால அருவி,

ஆறுபடையில் சூரனை வதம்
செய்த திருச்செந்தார்.

கோட்டத்தில் உருவாகி
கோட்டத்திலேயே
சங்கமிக்கும் தாமிரபரணி
வற்றாத ஜீவநதி.

கோமதி அம்மன் மண்ணாக
காக்கும் சங்கரன்கோயில்.

நவதிருப்பதியும் உறையும்
ஊர்கள்

இன்னும் எத்தனை...

திருநெல்வேலி அல்வா
தூத்துக்குடி மக்ரோன்
கோவில்பட்டி கடலைமிட்டாய்
உடன்குடி கருப்பட்டி
பார்டர் பரோட்டா
சங்கரன்கோயில் பிரியாணி
குழித்துறை தேன்
இலஞ்சி போழி
கல்லிடை அப்பளம்
குறும்பூர் பட்டர்சேவு
நாகர்கோவில் ரசக்கதலி

என்று எல்லோருக்கும்
ருசியா இருக்கும்
ஊர்கள் நிறைந்த
கோட்டம்.

ஏல என்று அன்போடு
கூப்பிட்டு
இலை போட்டு விருந்து
வைக்கும் நெல்லை.

இன்று தன்
சொந்த கட்டிடத்தில்.

இன்று வெள்ளி விழா.

வரலாறு பெற்ற ஊரில்
வணிகத்திலும் சேவையிலும்
வரலாறு உருவாக்கும் கோட்டம்.

இதை நடத்திய
அனைத்து அதிகாரகளுக்கும்

அலுவலக நண்பர்களுக்கும்

களப் பணியாளர்களான
வளரச்சி அதிகாரிகளுக்கும்

என்றும் காத்து நிற்கும்
முகவர் நண்பர்களுக்கும்

வாழ வைத்துக் கொண்டிருக்கும்
பாலிசிதாரர்களுக்கும்
பொது மக்களுக்கும்

இந்திய ஆயுள்காப்பீட்டுக்
கழகம் நன்றியுடன் இருக்கும்.

திருநெல்வேலி கோட்டத்திற்கு
வாழ்த்துகள்.

அல்வா போல
இலகுவா சாதனைகள
விழுங்க வாழ்த்துகளுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக